32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நம்மவூரு செய்திகள்

பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம்; அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து 3 நாள் போராட்டம் வாபஸ். Breaking News

பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம்; அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து 3 நாள் போராட்டம் வாபஸ்.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில், மாற்று வீட்டுமனை வழங்கக் கோரி 3-வது நாளாக பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்பிலி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பி வழிவதால், மழைக்காலங்களில் […]

July 25, 2026 Editor
ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன் ஆன்மீகம்

ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு ஸ்ரீ சந்திரகலாதேவி நிலாபிறை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு அலங்காரங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை […]

July 25, 2026 Editor
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு. Breaking News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டார விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்டிஓ லெனின் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, கனிமவளத் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை காது […]

July 25, 2026 Editor
மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி Breaking News

மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்பிலி கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் வசிக்கும் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழைநீர் சூழ்ந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சாலைகள் சேதமடைதல், வீடுகள் இடிந்து விழுதல், பாம்புகள் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

July 25, 2026 Editor
எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம். Breaking News

எலச்சிபாளையம் ஆஸ்பத்திரியில் நர்சுகளை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் நர்சுகளை நியமிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகரம் பஞ்சாயத்து பின்புறம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரியில், ஆதார் மூலம் நோயாளிகளின் வருகைப் பதிவு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை, ஊசி போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெரும்பாலும் ஒரே நர்சு கவனித்து வருவதால், சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் […]

July 11, 2026 Editor
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல். Breaking News

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் – பல்கலை துணைவேந்தர் தகவல்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்தது படிப்புக்கான அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் என பல்கலை துணை வேந்தர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரி ஆண்டு விழா மற்றும் ஹாஸ்டல் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் (பொ) நரேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ […]

June 26, 2026 Editor
‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார் Breaking News

‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார்

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, 107 வயது மூதாட்டி கண்ணீர் மல்க அளித்த புகாரும், ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக பிரசவம் நடைபெறாததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், சிறிய பிரச்னைகளுக்குக் கூட திருச்செங்கோடு மற்றும் சேலம் ஜிஹெச் களுக்கு  அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சுகப்பிரசவங்களை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. […]

June 18, 2026 Editor
70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை Breaking News

70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

சென்னை / திருச்செங்கோடு: திருச்செங்கோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். திருச்செங்கோடு தொகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை காவிரி உபரி நீரால் நிரப்பும் வகையில், காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் 70 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. பல தேர்தல்களில் இந்தத் […]

May 20, 2026 Editor
காசிக்கு சென்ற 67 பக்தர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல்: அமைச்சர் அருண்ராஜின் துரித நடவடிக்கையால் நிம்மதி! நம்மவூரு செய்திகள்

காசிக்கு சென்ற 67 பக்தர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல்: அமைச்சர் அருண்ராஜின் துரித நடவடிக்கையால் நிம்மதி!

திருச்செங்கோட்டில் இருந்து காசிக்கு ஆன்மீகப் பயணம் சென்ற 67 பக்தர்கள், அமைச்சர் அருண்ராஜின் துரித நடவடிக்கையால் ரயிலைத் தவறவிடாமல் பத்திரமாக ஊர் திரும்பினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 67 பேர், கடந்த 3-ம் தேதி சேலம் வழியாக காசி, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்றனர். தரிசனங்களை முடித்துக் கொண்டு, கடந்த 11-ம் தேதி ஆக்ராவிலிருந்து நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஆக்ராவைக் கடந்த சிறிது நேரத்தில் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு […]

May 17, 2026 Editor