32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு: பொதுவிருந்து. திருச்செங்கோடு

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு: பொதுவிருந்து.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான கைலாசநாதர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவிருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, தவெக நகர செயலாளர் நாகராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்கள் பிரபாகரன், ப.சித்ரா வண்ணகண்ணன், தி.இ.அர்த்தநாரி, ப.பச்சியப்பன், உதவி ஆணையர் மா.சின்னதுரை, கண்காணிப்பாளர் சு.கல்பனாதத், ஆய்வர் மா.நவீன்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]

August 15, 2026 Editor
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் 1008 கிலோ குங்கும அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் 1008 கிலோ குங்கும அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஆடி மாதத்தின் 5-வது மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் ஓங்காளியம்மனுக்கு 1008 கிலோ குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இன்று அம்மன் 1008 கிலோ குங்குமத்தை மலைபோல் குவித்து, அதன் நடுவே எழுந்தருளியவாறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் நீண்ட […]

August 14, 2026 Editor
திருச்செங்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை, திருச்செங்கோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், தனிப்பிரிவு எஸ்.ஐ ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் மற்றும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் […]

August 14, 2026 Editor
ஆக.14-ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின்தடை. திருச்செங்கோடு

ஆக.14-ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின்தடை.

திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட உஞ்சனை, முசிறி, இளநகர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 14.08.2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உஞ்சனை துணை மின்நிலையம்: உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலாங்காட்டுப்புதூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85-கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரபாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், இடையார்பாளையம், T.கைலாசம்பாளையம், கரிச்சிபாளையம் மற்றும் கோலாரம். முசிறி துணை மின்நிலையம்: […]

August 12, 2026 Editor
திருச்செங்கோடு அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு!. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு!.

திருச்செங்கோடு காவல் எல்லைக்குட்பட்ட ராஜகவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள ஊர் பொதுக்கிணற்றில், வெங்கடாசலம் (சுமார் 40) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். கிணற்றில் சுமார் 30 அடி அளவுக்கு தண்ணீர் இருந்த நிலையில், கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் வெங்கடாசலம் தவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கிணற்றுக்குள் […]

August 12, 2026 Editor
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதி: 5-வது நாளில் பூபதியின் உண்ணாவிரதம் வாபஸ். திருச்செங்கோடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதி: 5-வது நாளில் பூபதியின் உண்ணாவிரதம் வாபஸ்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலரும் விவசாயியுமான பூபதி மேற்கொண்ட தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 5-வது நாளில் முடிவுக்கு வந்தது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி, பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர […]

August 12, 2026 Editor
திருச்செங்கோட்டில் மறைந்து போன தெரு பெயர் பலகைகள்; போஸ்டர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை Breaking News

திருச்செங்கோட்டில் மறைந்து போன தெரு பெயர் பலகைகள்; போஸ்டர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள தெரு, வீதி மற்றும் முக்கிய சாலைகளுக்கான பெயர் பலகைகளில் சினிமா மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், பெயர்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கும், வெளியூரில் இருந்து நகருக்கு வருபவர்களுக்கும் குறிப்பிட்ட தெருக்கள் மற்றும் வீதிகளை எளிதில் அடையாளம் காணவும், முகவரிகளை கண்டறியவும் […]

August 12, 2026 Editor
நீர்நிலையை காக்கக் கோரி 5-வது நாளாக தனிநபர் உண்ணாவிரதம்; திருச்செங்கோட்டில் பரபரப்பு Breaking News

நீர்நிலையை காக்கக் கோரி 5-வது நாளாக தனிநபர் உண்ணாவிரதம்; திருச்செங்கோட்டில் பரபரப்பு

நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி, திருச்செங்கோடு அருகே சமூக ஆர்வலர் ஒருவர் 5-வது நாளாக தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கீழ்முகம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 56/3A இடம் அரசு ஆவணங்களில் நீர்நிலையாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இடத்தில் வண்டல் மண் கொட்டுவதற்கு திருச்செங்கோடு தாசில்தார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நீர்நிலையாக பதிவாகியுள்ள இடத்தில் மண் கொட்ட அனுமதி வழங்கியது சட்ட விதிகளுக்கும், நீர்நிலை பாதுகாப்பு கொள்கைக்கும் எதிரானது எனவும் […]

August 11, 2026 Editor
திருச்செங்கோட்டில் தொழிற்சங்கங்கள் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் தொழிற்சங்கங்கள் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐகேஎஸ், ஐஎன்டியுசி, எஸ்.கே.எம்., யுடியுசி, எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் […]

August 10, 2026 Editor
திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம் திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலாளராக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நகர செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திருநாவுக்கரசு, திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் என்கிற முகிலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குபேந்திரன், மணி, சின்னசாமி, கதிரேசன், சாந்தா, பொருளாளர் ராஜமாணிக்கம், மண்டல துணைச் செயலாளர்கள் பெருமாவளவன், தினேஷ் கார்த்தி, முருகானந்தம், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மல்லசமுத்திரம் ஒன்றிய […]

August 9, 2026 Editor