32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

குமாரபாளையம்

வெப்படை காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்பு. குமாரபாளையம்

வெப்படை காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்பு.

பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக (இன்ஸ்பெக்டர்) வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டார். வெப்படை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சங்கீதா, புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வளர்மதி, வெப்படை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டு, காவல் நிலையத்தின் பணிகளை மேற்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் […]

August 19, 2026 Editor
80 ஆண்டுகளாக வசிக்கும் 37 குடும்பங்களுக்கு பட்டா கோரி பள்ளிபாளையம் மக்கள் போராட்டம். குமாரபாளையம்

80 ஆண்டுகளாக வசிக்கும் 37 குடும்பங்களுக்கு பட்டா கோரி பள்ளிபாளையம் மக்கள் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 37 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் […]

August 17, 2026 Editor
குமாரபாளையத்தில் அதிகாலை வீட்டின் முன் நின்ற பைக் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல். குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அதிகாலை வீட்டின் முன் நின்ற பைக் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பல்சர் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. குமாரபாளையம் அருகே சேரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா. தனியார் செல்போன் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது பல்சர் […]

August 17, 2026 Editor
குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை. Breaking News

குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் பார்மசி கல்லூரி விடுதி அறையில் 3-ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேச்சல், குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதிய உணவுக்குப் பிறகு அறைக்குச் சென்ற ரேச்சல், மாலை வரை வெளியே […]

August 13, 2026 Editor
குமாரபாளையத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கண்டன பேரணி. குமாரபாளையம்

குமாரபாளையத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கண்டன பேரணி.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடைபிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென் […]

August 13, 2026 Editor
குமாரபாளையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி. குமாரபாளையம்

குமாரபாளையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, குமாரபாளையத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குளத்துக்காடு பகுதியில் தொடங்கிய பேரணி, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை வழியாக சென்று குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். உடல் உறுப்பு தானம் […]

August 13, 2026 Editor
நான்கு ஆண்டுகளாக மோசமான நிலையில் சாலை; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை. குமாரபாளையம்

நான்கு ஆண்டுகளாக மோசமான நிலையில் சாலை; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

பள்ளிபாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகாடு சாலை கடந்த 4 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகாடு பகுதியில் உள்ள சுமார் 1,200 மீட்டர் நீளமுள்ள சாலையை சீரமைக்கக் கோரி, கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். இதையடுத்து சாலையை அதிகாரிகள் நேரில் அளவீடு […]

August 12, 2026 Editor