செய்தியைக் கேட்க / Listen to News
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடைபிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து நடைபெற்ற கண்டன பேரணியில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.