32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு அருகே ரவுண்டானா மீது ஏறி லாரி கவிழ்ந்து விபத்து.

Editor Published: July 22, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஊஞ்சப்பாளையம் அவுட்டர் பைபாஸ் ரோடு பகுதியில், நள்ளிரவில் ரவுண்டானா மீது லாரி ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து எள்ளு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி லாரி ஒன்று சென்றது. ராமன் என்பவருக்கு சொந்தமான இந்த லாரியை, சிவானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு, திருச்செங்கோடு ஊஞ்சப்பாளையம் அவுட்டர் பைபாஸ் ரோடு அருகே லாரி வந்தபோது  உயரம் குறைவாக இருந்த ரவுண்டானா சுவர் மீது சக்கரம் ஏறி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஏற்பட்டது.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா மிகப் பெரிய அளவில் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், ரவுண்டானாவின் தடுப்புச் சுவர் மிகவும் உயரம் குறைவாக கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக லாரியின் சக்கரம் ரவுண்டானா சுவரின் மீது ஏறி, வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டப்பட்டுகின்றனர்.

வாகனம் குறைந்த வேகத்தில் வந்ததால், பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் டைரவர் கிளினர் ஆகியோர் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த ரவுண்டானாவின் அளவைச் சிறியதாக்க வேண்டும். மேலும், முறையான மின்விளக்கு வசதிகள், ஒளிரும் பலகைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, வாகனங்கள் இடையூறின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author