32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மருத்துவ உபகரணங்கள் 

Editor Published: July 22, 2026 1 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.25.45 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான செக்கை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜிடம் சென்னை தனியார் அமைப்பு நிர்வாகிகள் வழங்கினர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜின் முயற்சியால், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்னை அடையார் தனியார் அமைப்பு  சார்பில், சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.25.45 லட்சத்திற்கான செக்கை தனியார் அமைப்பு நிர்வாகிகள் அமைச்சரிடம் வழங்கினர். இந்த நிதியைக் கொண்டு, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்குத் தேவையான ‘டிஜிட்டல் கலர் டாப்ளர் அல்ட்ராசவுண்ட்’ கருவி மற்றும் ‘ஆட்டோக்ளேவ் ஸ்டெரிலைசேஷன் யூனிட்’ ஆகிய முக்கிய மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன.

இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், “இந்த நவீன மருத்துவ உபகரணங்கள் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்படுவதன் மூலம், நோயறிதல் மற்றும் சிகிச்சைத் தரம் மேலும் மேம்படும். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை, எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவைகள் எளிதில் கிடைக்க இது வழிவகுக்கும்,” என்றார்.

About The Author