32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Editor

அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம் நாமக்கல்

அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம்

இந்திய அஞ்சல் துறையின் நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில், 30.06.2026 உடன் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக (வீடியோ கான்பரன்சிங்) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்களது குறைகளை “Regional Level Pension Adalat” என்ற குறிப்புடன் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனுக்கள் கோட்ட அலுவலகத்திற்கு […]

August 7, 2026 Editor
திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்.

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாணார்பாளையம் இடுகாட்டில் புதிய பயோ மைனிங் எந்திரம் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் நீண்ட காலமாக அணிமூர் உரக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, […]

August 7, 2026 Editor
நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்; Breaking News

நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்;

நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், காந்திவாதி ரமேஷ் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அவர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வளாகத்தில் திடீரென போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க […]

August 7, 2026 Editor
கருணாநிதி நினைவு நாள்: திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மௌன ஊர்வலம் திருச்செங்கோடு

கருணாநிதி நினைவு நாள்: திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மௌன ஊர்வலம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மேற்கு நகர தி.மு.க. செயலாளர் நடேசன், கிழக்கு […]

August 7, 2026 Editor
திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா; நெசவாளர்களுக்கு ரூ.10.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா; நெசவாளர்களுக்கு ரூ.10.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மாளிகையில், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை, திருச்செங்கோடு சரகம் சார்பில் 12-வது தேசிய கைத்தறி தின விழா இன்று  நடைபெற்றது. விழாவையொட்டி, கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த இராசிபுரம் பட்டுச் சேலைகள், சின்னப்பம்பட்டி மற்றும் ஆர்.புதுப்பாளையம் பருத்திச் சேலைகள், பவானி ஜமக்காளங்கள், சென்னிமலை போர்வைகள், துண்டுகள், மேட் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட […]

August 7, 2026 Editor
திருச்செங்கோடு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அன்னதானம் ஆன்மீகம்

திருச்செங்கோடு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அன்னதானம்

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு நகர டூரிஸ்ட் வேன் அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. […]

August 7, 2026 Editor
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன். ஆன்மீகம்

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்.

ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். பக்தர்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து அம்மனை வழிபட்டனர். இதனால், […]

August 7, 2026 Editor
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நாமக்கல்லில் அமைதிப் பேரணி Breaking News

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நாமக்கல்லில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நாமக்கல்லில் இன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணா சிலையில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்கிய அமைதிப் பேரணி, பரமத்தி ரோட்டில் உள்ள கருணாநிதி சிலை வரை நடைபெற்றது. பின்னர், கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சி. மணிமாறன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் […]

August 7, 2026 Editor
ஆடி 4-வது வெள்ளி: தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்து மாரியம்மன்; திரளான பக்தர்கள் தரிசனம் ஆன்மீகம்

ஆடி 4-வது வெள்ளி: தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுத்து மாரியம்மன்; திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு தேரடி வீதி, ஐந்து ரோடு பகுதியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோயிலில், அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் திரளாகக் குவிந்ததால், கோயில் வளாகம் முழுவதும் பக்தி பரவசமான […]

August 7, 2026 Editor
கூட்டப்பள்ளி ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய இருவர் பிடிபட்டனர்; நடவடிக்கை இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு Breaking News

கூட்டப்பள்ளி ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய இருவர் பிடிபட்டனர்; நடவடிக்கை இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியில் நள்ளிரவு நேரத்தில் மருத்துவக் கழிவுகள், மதுபானப் பாட்டில்கள் மற்றும் உணவுக் கழிவுகளை மினி ஆட்டோவில் கொண்டு வந்து கொட்டியதாகக் கூறப்படும் இருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள், மதுபானக் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை கொட்டி வருவதாக […]

August 6, 2026 Editor