32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்; 2 மாதங்களில் நிறைவு – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Editor Published: August 8, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவேட்டிப்பட்டி ஏரியை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும். ஏரியை தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரம் மேம்படும். மேலும், ஏரி சுற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கும்.
பறவைகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்படுவதுடன், ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நடைப்பாதையும் அமைக்கப்படும்.
தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், திருமண மண்டபங்கள் மற்றும் அரசு மண்டபங்களில் விழாக்காலங்களில் கண்காட்சிகள் அமைக்கும் தடைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படும் வகையில் நடைபெறும் விழாக்கால விற்பனையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த கண்காட்சி கடைகள் மூலம் அரசுக்கு உரிய வரி வருவாய் கிடைக்கிறதா என்பதுடன், விற்பனை செய்யப்படும் பொருட்கள் முறையாக வரி செலுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

About The Author