32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

அரசு துறையில் உண்மையாக உழைப்பவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்- அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை.

Editor Published: May 17, 2026 1 நிமிட வாசிப்பு Updated: June 11, 2026 நாமக்கல்
எழுத்து அளவு:

பதவியேற்ற பிறகு முதன் முறையாக திருச்செங்கோடு வந்த அமைச்சர் அருண்ராஜ்ஜுக்கு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, நாமக்கல் எம்.எல்.ஏ திலீப், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகர்  மலர்கொத்து வழங்கி, வரவேற்றனர்.

தொடர்ந்து, அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் துர்காமூர்த்தி, முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழக முதல்வர் விஜய் முதல் கையெழுத்தாக, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், போதைப்பொருட்கள் தடுப்புப்படை ஆகிய முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்கள். எனவே அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், அனைத்து துறை அரசு அலுவலர்களும் பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசில் உண்மையாக உழைப்பவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்படுவார்கள் என  அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர் அருண்ராஜ் காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையினை ஏற்றுக் கொண்டார். 

இக்கூட்டத்தில், மாவட்ட எஸ்பி விமலா, மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், டிஆர்ஓ சரவணன், திருச்செங்கோடு ஆர்டிஓ லெனின் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் அனைத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

About The Author