32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

வைகாசி அமாவாசை, திருச்செங்கோட்டில் திருட்டுத் தேர் இழுப்பு- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Editor Published: May 17, 2026 1 நிமிட வாசிப்பு Updated: May 20, 2026 Breaking News
எழுத்து அளவு:

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலின் வைகாசி விசாகத் தேர் திருவிழா வரும் 22 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை ஒட்டி முதல் நிகழ்வாக அஷ்டதிக்கு பாலகர்கள் , நான்கு ரத வீதிகளில் உள்ள காவல் தெய்வங்களுக்கு இறைவனின் ரதவீதி உலாவை எடுத்துகூறவும், ரத பவனி தடையின்றி நடை பெறவும்  பத்ரகாளியம்மன் அம்மன் கோவிலில் இருந்து அமாவாசை திதி தினத்தன்று கிருத்திகை நட்சத்திர அம்மன்தேர் பவனிவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரியமாக அமாவாசை தின நடு இரவில் அம்மன் தேர் புறப்பாடு நடக்கும். அப்போது அனைத்து வீதிவிளக்குகள், வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்கும். இதனால் இந்த தேரோட்டத்தை இருட்டுத் தேர் என பொதுமக்கள் அழைப்பார்கள். நாளைடைவில் மருவி திருட்டுத் தேர் என அழைக்கப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மட்டும் இந்த தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம். கடந்த சிலவருடங்களாக அரசு உத்தரவால் இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர் மாலையில் வெளிச்சத்தில் இழுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், அறங்காவலர்கள் குழுத் தலைவர் தங்கமுத்து,  உள்ளிட பலர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரைவடம் பிடித்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வந்த தேர் நிலைசேர்ந்தது. முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருட்டுத் தேர் என அழைக்கப்படும் பத்ரகாளியம்மன் தேரை குழந்தைகள், பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

About The Author