32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு அருகே மளிகைக் கடையில் குட்கா விற்பனை: 10 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது.

Editor Published: August 19, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

திருச்செங்கோடு அருகே மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருவேப்பம்பட்டி பிரிவு ரோட்டில் மளிகைக் கடை நடத்தி வரும் அப்துல்காதர் என்பவர், தனது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அப்துல்காதரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

About The Author