32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

எலச்சிபாளையத்தில் சுதந்திர தின விழா: சாதி, மத மோதல்களை தவிர்க்க உறுதிமொழி.

Editor Published: August 15, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நாமக்கல் மாவட்டக் குழு சார்பில், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் கே.மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் ரஹமத், சேகர், ராஜி, செபஸ்டின், வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மக்கள் மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும்; சாதி, மத மோதல்களை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் கவிதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், சிஐடியு மோட்டார் சங்க மாவட்ட உதவி செயலாளர் முனியப்பன், செல்வராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About The Author