நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, காவல்துறை மற்றும் என்.சி.சி.யைச் சேர்ந்த 60 பேருக்கு பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 238 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், 16 பயனாளிகளுக்கு ரூ.33.72 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.