32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் பலி.

Editor Published: August 12, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய அவர், இதே காலகட்டத்தில் மாவட்டத்தில் 17 கொலை வழக்குகளில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொலை உயிரிழப்புகளைவிட சுமார் 20 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார்.

வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்றும், 18 வயது நிரம்பாத சிறுவர்களிடம் வாகனங்களை வழங்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் தகவல்களை தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் எஸ்.பி. கேட்டுக்கொண்டார்.

About The Author