32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அன்னதானம்

Editor Published: August 7, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு நகர டூரிஸ்ட் வேன் அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சியை திருச்செங்கோடு நகர டூரிஸ்ட் வேன் அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

About The Author