உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பழங்கள், ஜூஸ், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன.
ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாணவர்களுக்கு உடல்நல பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ரத்தத்தை சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் பிரேம்குமார், பேராசிரியர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.