32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.349 ஆக உயர்வு!.

Editor Published: August 12, 2026 1 நிமிட வாசிப்பு தமிழகம்
எழுத்து அளவு:
🔴 LIVE COVERAGE / நேரலை
Auto-refreshing every 30s
03:50 AM

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.349 ஆக உயர்வு!.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.349 ஆக உயர்வு!.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது சில ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் கட்டணம் சுமார் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

பழைய ரூ.299 திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய ரூ.349 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏர்டெல் நிறுவனம் ரூ.579, ரூ.619 மற்றும் ரூ.649 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரத்தில், ஜியோ நிறுவனம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகளை உள்ளடக்கிய ரூ.349 திட்டத்தை வழங்கி வருகிறது.

இதனால் ஏர்டெல்லின் கட்டண மாற்றம் மற்றும் சில குறைந்த விலை திட்டங்களின் நீக்கம் மொபைல் வாடிக்கையாளர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

About The Author