32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

4 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்த பரிசு இந்த வெற்றி! – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி

Editor Published: October 11, 2026 1 நிமிட வாசிப்பு ராசிபுரம்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 3 புதிய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.

வெண்ணந்தூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடம், பட்டணம் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் உள்ளிட்ட 3 புதிய கட்டிடங்களை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட கலெக்டர் மதுபாலன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசுகையில், “நடைபெற்று முடிந்த இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், நான்கு மாத கால ஆட்சிக்கு மக்கள் பரிசளிக்கும் வகையில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய உள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சியினருக்கும் மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்” என்றார்.

பத்திரப்பதிவில் இணையதள தாமதம்: அமைச்சர் விளக்கம்

பத்திரப்பதிவில் ஏற்படும் இணையதளத் தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, உள்ளூர் இணையதள இணைப்பில் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சர்வர் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அடுத்த 2 முதல் 3 மாதங்களில் கிளை சர்வர்களை கிளவுட் சர்வருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இனிவரும் காலங்களில் காகிதமில்லா பத்திரப்பதிவு முறை விரைவில் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

About The Author