
தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில், நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.