32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு.

Editor Published: August 20, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே.பி.சரவணன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பட்டியலின மாவட்ட தலைவர் ஆர்.பி.தமிழரசு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம்குமார், வழக்கறிஞர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் வேல்ராஜ், மாவட்ட பட்டியலின பொதுச்செயலாளர்கள் அருள், விஜயகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஒண்டிவீரன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் நகர தலைவர் தினேஷ் நன்றி கூறினார்.

About The Author