சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான கைலாசநாதர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவிருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, தவெக நகர செயலாளர் நாகராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்கள் பிரபாகரன், ப.சித்ரா வண்ணகண்ணன், தி.இ.அர்த்தநாரி, ப.பச்சியப்பன், உதவி ஆணையர் மா.சின்னதுரை, கண்காணிப்பாளர் சு.கல்பனாதத், ஆய்வர் மா.நவீன்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.