32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு!.

Editor Published: August 12, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

திருச்செங்கோடு காவல் எல்லைக்குட்பட்ட ராஜகவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள ஊர் பொதுக்கிணற்றில், வெங்கடாசலம் (சுமார் 40) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடினார்.

கிணற்றில் சுமார் 30 அடி அளவுக்கு தண்ணீர் இருந்த நிலையில், கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் வெங்கடாசலம் தவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தீயணைப்புத்துறையினரின் துரிதமான மீட்பு நடவடிக்கையால் கிணற்றில் தவறி விழுந்த நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About The Author