
திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தவெக நிர்வாகிகள் மணிவண்ணன், முத்து, முத்துக்குமார், சுபீஷ், ஜவஹர், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.