32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Editor Published: August 12, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ நாககன்னி கோயிலில், 22-ம் ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பக்தர்களுக்கு பிடிகாசு வழங்குவது வழக்கம். பிடிகாசு பெற்றால் செல்வம் பெருகும், கடன் பிரச்னைகள் நீங்கி தொழில் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

விழாவையொட்டி 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க அஷ்டலட்சுமி ஹோமம், நரசிம்ம ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், ஸ்ரீ சண்டி கருப்பசாமிக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிடிகாசு பெறுவதற்காக நாமக்கல், சேலம், ஆத்தூர், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

About The Author