32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

அக்.2-ல் நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.

Editor Published: September 29, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார்.

அரசின் உத்தரவின்படி, அக்டோபர் 2-ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசின் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், டாஸ்மாக் மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி நாளில் மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறப்பது அல்லது மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் எச்சரித்துள்ளார்.

About The Author