32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>நாமக்கல் செய்திகள்</span>

லாரி கடன் வசூலில் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல். நாமக்கல்

லாரி கடன் வசூலில் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்.

லாரி உரிமையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாமக்கல்லில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கடன் தவணை வசூலின்போது நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. […]

August 13, 2026 Editor
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நாமக்கல்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து நாமக்கல்லில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மதுபான சில்லரை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஆன்லைன் மது விற்பனை […]

August 13, 2026 Editor
நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் பலி. நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் பலி.

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய அவர், இதே காலகட்டத்தில் மாவட்டத்தில் 17 கொலை வழக்குகளில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொலை உயிரிழப்புகளைவிட சுமார் 20 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார். வாகனம் ஓட்டுவதற்கு […]

August 12, 2026 Editor
ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள். ராசிபுரம்

ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள்.

பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் லி.மதுபாலன் தலைமையில், 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன், சொட்டுநீர்ப்பாசன மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்ட 99 மனுக்களில் 70 மனுக்களுக்கு தீர்வு […]

August 12, 2026 Editor
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஜெனிவா ஒப்பந்த தின போட்டிகள்; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. நாமக்கல்

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் ஜெனிவா ஒப்பந்த தின போட்டிகள்; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நாமக்கல் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) க. பார்வதி தலைமை வகித்தார். ஜெனிவா ஒப்பந்தங்களின் மனிதநேயக் கொள்கைகள் மற்றும் போர்க்காலங்களில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. “குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுப்போம்”, “குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்” […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் அஞ்சல் துறை பணியாளர்கள் பங்கேற்ற மூவர்ணக்கொடி விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் அஞ்சல் துறை பணியாளர்கள் பங்கேற்ற மூவர்ணக்கொடி விழிப்புணர்வு பேரணி.

இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில் இல்லந்தோறும் மூவர்ணக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பேரணியை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா. இந்திரா தொடங்கி வைத்தார். இதில் அஞ்சல் கோட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூவர்ணக் கொடிகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர். பேரணி டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, பேருந்து நிலையம், மோகனூர் சாலை வழியாக சென்று மீண்டும் […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’ நாமக்கல்

நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ‘திரங்கா யாத்திரை’ நடைபெற்றது. பா.ஜ.க. நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி. சரவணன் தலைமையில் நடைபெற்ற தேசியக்கொடி பேரணி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து பேரணி நாமக்கல் கடைவீதி வழியாக சென்று பூங்கா சாலை நுழைவுவாயில் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு […]

August 12, 2026 Editor
நாமக்கல்லில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற பேரணி, “REJECT MODI DELIMITATION – நியாயமான பிரதிநிதித்துவத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்றது. தமிழகத்தின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நியாயமான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய […]

August 12, 2026 Editor
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் ஆன்மீகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை அலங்காரம்

உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் இன்று முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் திரளாகக் கூடியதால் சிறப்பு பூஜை நேரத்தில் பக்தி பரவசமான சூழல் நிலவியது.

August 10, 2026 Editor
“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன். திருச்செங்கோடு

“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் பிரச்சார நடைபயணத்தின் ஒரு பகுதியாக, திருச்செங்கோட்டில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 4 ரத வீதிகள் வழியாக நடைபெற்ற நடைபயணம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். முன்னதாக […]

August 9, 2026 Editor
உடனடி செய்திகள்