32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>நாமக்கல் மாவட்ட செய்திகள்</span>

குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை. Breaking News

குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் பார்மசி கல்லூரி விடுதி அறையில் 3-ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேச்சல், குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதிய உணவுக்குப் பிறகு அறைக்குச் சென்ற ரேச்சல், மாலை வரை வெளியே […]

August 13, 2026 Editor
குமாரபாளையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி. குமாரபாளையம்

குமாரபாளையத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, குமாரபாளையத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குளத்துக்காடு பகுதியில் தொடங்கிய பேரணி, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை வழியாக சென்று குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். உடல் உறுப்பு தானம் […]

August 13, 2026 Editor
ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாட்டி, 2 வயது பேரன் பலி; 4 பேர் படுகாயம் Breaking News

ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாட்டி, 2 வயது பேரன் பலி; 4 பேர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் 2 வயது பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியைச் சேர்ந்த நடேசன் (60), அவரது மனைவி அமுதா (52), மகன் பிரவீன் (32), மருமகள் கோமதி (31) மற்றும் பேரன்கள் ஜிவித் (3), நிஜித் (2) ஆகிய 6 பேரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் […]

August 13, 2026 Editor
ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. ஆன்மீகம்

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ நாககன்னி கோயிலில், 22-ம் ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பக்தர்களுக்கு பிடிகாசு வழங்குவது வழக்கம். பிடிகாசு பெற்றால் செல்வம் பெருகும், கடன் பிரச்னைகள் நீங்கி தொழில் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவையொட்டி 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க […]

August 12, 2026 Editor
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் கண்கள் கொண்ட அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் […]

August 12, 2026 Editor
ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள். ராசிபுரம்

ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள்.

பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் லி.மதுபாலன் தலைமையில், 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன், சொட்டுநீர்ப்பாசன மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்ட 99 மனுக்களில் 70 மனுக்களுக்கு தீர்வு […]

August 12, 2026 Editor
ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு. ஆன்மீகம்

ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்படுகையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தீமைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது இந்து சமய நம்பிக்கையாக உள்ளது.  இதையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பிண்டம், எள் உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து […]

August 12, 2026 Editor
திருச்செங்கோடு அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு!. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு!.

திருச்செங்கோடு காவல் எல்லைக்குட்பட்ட ராஜகவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள ஊர் பொதுக்கிணற்றில், வெங்கடாசலம் (சுமார் 40) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். கிணற்றில் சுமார் 30 அடி அளவுக்கு தண்ணீர் இருந்த நிலையில், கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் வெங்கடாசலம் தவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கிணற்றுக்குள் […]

August 12, 2026 Editor
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதி: 5-வது நாளில் பூபதியின் உண்ணாவிரதம் வாபஸ். திருச்செங்கோடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதி: 5-வது நாளில் பூபதியின் உண்ணாவிரதம் வாபஸ்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலரும் விவசாயியுமான பூபதி மேற்கொண்ட தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 5-வது நாளில் முடிவுக்கு வந்தது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி, பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர […]

August 12, 2026 Editor
திருச்செங்கோட்டில் மறைந்து போன தெரு பெயர் பலகைகள்; போஸ்டர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை Breaking News

திருச்செங்கோட்டில் மறைந்து போன தெரு பெயர் பலகைகள்; போஸ்டர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள தெரு, வீதி மற்றும் முக்கிய சாலைகளுக்கான பெயர் பலகைகளில் சினிமா மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், பெயர்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கும், வெளியூரில் இருந்து நகருக்கு வருபவர்களுக்கும் குறிப்பிட்ட தெருக்கள் மற்றும் வீதிகளை எளிதில் அடையாளம் காணவும், முகவரிகளை கண்டறியவும் […]

August 12, 2026 Editor
உடனடி செய்திகள்