32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம்

ராசிபுரம் அருகே அரசு பள்ளி விவகாரம்: 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகை. ராசிபுரம்

ராசிபுரம் அருகே அரசு பள்ளி விவகாரம்: 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகை.

ராசிபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ராஜா–சசிகலா தம்பதியின் 2 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் மாணவர்களுக்கு அதிகளவில் வீட்டுப்பாடம் வழங்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் […]

August 18, 2026 Editor
ஆவணி சஷ்டியை முன்னிட்டு ராசிபுரம் பாலமுருகன் கோயிலில் 108 சங்கு அபிஷேகம். ஆன்மீகம்

ஆவணி சஷ்டியை முன்னிட்டு ராசிபுரம் பாலமுருகன் கோயிலில் 108 சங்கு அபிஷேகம்.

ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு, ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகன் மற்றும் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் […]

August 18, 2026 Editor
ராசிபுரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு வீரவணக்கம். ராசிபுரம்

ராசிபுரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு வீரவணக்கம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த 7 குறவர் பழங்குடியின வீரர்களுக்கு ராசிபுரத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வன வேங்கைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். இதையடுத்து, வன வேங்கைகள் கட்சியினர் மற்றும் பழங்குடியின மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த குறவர் பழங்குடியின வீரர்களின் நினைவாக மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில் […]

August 15, 2026 Editor
ராசிபுரம் அருகே 80 அடி தேசியக் கொடியுடன் 4 கி.மீ. ஊர்வலம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே 80 அடி தேசியக் கொடியுடன் 4 கி.மீ. ஊர்வலம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் கலைக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில், 80 அடி நீளமுள்ள தேசியக் கொடியை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தியபடி ஈரோடு சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்றனர். தொடர்ந்து மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் என்.சி.சி. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

August 15, 2026 Editor
ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஒரு லட்சம் வெற்றிலைகளைக் கொண்டு அம்மனுக்கு […]

August 14, 2026 Editor
ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாட்டி, 2 வயது பேரன் பலி; 4 பேர் படுகாயம் Breaking News

ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாட்டி, 2 வயது பேரன் பலி; 4 பேர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் 2 வயது பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியைச் சேர்ந்த நடேசன் (60), அவரது மனைவி அமுதா (52), மகன் பிரவீன் (32), மருமகள் கோமதி (31) மற்றும் பேரன்கள் ஜிவித் (3), நிஜித் (2) ஆகிய 6 பேரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் […]

August 13, 2026 Editor
ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. ஆன்மீகம்

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ நாககன்னி கோயிலில், 22-ம் ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பக்தர்களுக்கு பிடிகாசு வழங்குவது வழக்கம். பிடிகாசு பெற்றால் செல்வம் பெருகும், கடன் பிரச்னைகள் நீங்கி தொழில் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவையொட்டி 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க […]

August 12, 2026 Editor
ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள். ராசிபுரம்

ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் நலத்திட்ட உதவிகள்.

பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் லி.மதுபாலன் தலைமையில், 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன், சொட்டுநீர்ப்பாசன மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்ட 99 மனுக்களில் 70 மனுக்களுக்கு தீர்வு […]

August 12, 2026 Editor
பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை ராசிபுரம்

பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை; அமைச்சர், கலெக்டர் நேரில் பேச்சுவார்த்தை

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு, ராமநாதபுரம், மத்துரூட் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பட்டா, சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை […]

August 8, 2026 Editor
சர்வதேச சிலம்பப் போட்டி, ராசிபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை. Breaking News

சர்வதேச சிலம்பப் போட்டி, ராசிபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த மாத இறுதியில் தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில், ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த ரக்ஷா சன்மதி மற்றும் சர்வேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கங்களை வென்றனர். தாயகத்திற்கு திரும்பிய மாணவர்களை பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை இயக்குநர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். […]

August 6, 2026 Editor