செய்தியைக் கேட்க / Listen to News
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த மாத இறுதியில் தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில், ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த ரக்ஷா சன்மதி மற்றும் சர்வேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கங்களை வென்றனர்.
தாயகத்திற்கு திரும்பிய மாணவர்களை பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை இயக்குநர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, சக மாணவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி, தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களை கௌரவித்தனர்.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.