32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு

“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன். திருச்செங்கோடு

“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் பிரச்சார நடைபயணத்தின் ஒரு பகுதியாக, திருச்செங்கோட்டில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 4 ரத வீதிகள் வழியாக நடைபெற்ற நடைபயணம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். முன்னதாக […]

August 9, 2026 Editor
காவிரி–திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள்; திருச்செங்கோடு விவசாயிகள் கோரிக்கை. திருச்செங்கோடு

காவிரி–திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள்; திருச்செங்கோடு விவசாயிகள் கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மாநில தலைவர் ரவீந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நல்லா கவுண்டர், மாவட்டச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின் இணைப்புகளை விரைந்து […]

August 9, 2026 Editor
தரமான இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி திருச்செங்கோடு

தரமான இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை மாணவிகள் 5 மணி நேரத்தில் கைத்தறி நெசவாளரை மையமாகக் கொண்டு ஆயிரம் ஓவியங்கள் வரைந்து நோபில் உலக சாதனை படைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர். விஜய் பாலாஜி, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாணவிகள் வரைந்த […]

August 8, 2026 Editor
திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம். Breaking News

திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்.

திருச்செங்கோடு மற்றும் வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வளர்மதி வெப்படை போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெப்படை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, புதுசத்திரம் போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான இடமாற்ற உத்தரவு காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

August 8, 2026 Editor
திருச்செங்கோட்டில் ரேப்பிடோ பைக் ரைடர் வாகனங்கள் பறிமுதல்; ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ பைக் ரைடர் வாகனங்கள் பறிமுதல்; ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ.

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ (Rapido) செயலி மூலம் இயங்கியதாகக் கூறப்படும் இருசக்கர வாகனங்களை ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு வாகனங்களுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்செங்கோட்டில் கடந்த சில நாட்களாக ரேப்பிடோ செயலி மூலம் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இயங்கி வருவதாகவும், இதனால் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையப்பா அனைத்து ஆட்டோ, […]

August 7, 2026 Editor
மங்களம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 5 மாதங்களில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி திருச்செங்கோடு

மங்களம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 5 மாதங்களில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் ஊராட்சியில் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டாஸ்மாக் கடையால் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அந்தக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து மல்லசமுத்திரம் போலீசார் மற்றும் டாஸ்மாக் தாசில்தார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், […]

August 7, 2026 Editor
திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்.

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாணார்பாளையம் இடுகாட்டில் புதிய பயோ மைனிங் எந்திரம் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் நீண்ட காலமாக அணிமூர் உரக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, […]

August 7, 2026 Editor
கருணாநிதி நினைவு நாள்: திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மௌன ஊர்வலம் திருச்செங்கோடு

கருணாநிதி நினைவு நாள்: திருச்செங்கோட்டில் தி.மு.க. சார்பில் மௌன ஊர்வலம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மேற்கு நகர தி.மு.க. செயலாளர் நடேசன், கிழக்கு […]

August 7, 2026 Editor
திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா; நெசவாளர்களுக்கு ரூ.10.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா; நெசவாளர்களுக்கு ரூ.10.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மாளிகையில், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை, திருச்செங்கோடு சரகம் சார்பில் 12-வது தேசிய கைத்தறி தின விழா இன்று  நடைபெற்றது. விழாவையொட்டி, கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த இராசிபுரம் பட்டுச் சேலைகள், சின்னப்பம்பட்டி மற்றும் ஆர்.புதுப்பாளையம் பருத்திச் சேலைகள், பவானி ஜமக்காளங்கள், சென்னிமலை போர்வைகள், துண்டுகள், மேட் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட […]

August 7, 2026 Editor
திருச்செங்கோடு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அன்னதானம் ஆன்மீகம்

திருச்செங்கோடு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்களுக்கு அன்னதானம்

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு நகர டூரிஸ்ட் வேன் அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. […]

August 7, 2026 Editor