32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் மையோபியா பாதிப்பு: செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் நாமக்கல்

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் மையோபியா பாதிப்பு: செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்

நாமக்கல்லில் தனியார் கண் மருத்துவமனையின்  புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. புதிய மருத்துவமனையை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து கண் மருத்துவர் ராமமூர்த்தி கூறுகையில், குழந்தைகள் செல்போன் மற்றும் கணினி உள்ளிட்ட திரை சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மையோபியா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். எனவே, தேவையின்றி குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளின் திரை பயன்பாட்டு […]

September 27, 2026 Editor
5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். நாமக்கல்

5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வங்கி துறையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள பாகுபாடுகளை நீக்கி நியாயமான முறையில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை (11.09.2026) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு […]

September 10, 2026 Editor
நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி. நாமக்கல்

நாமக்கல்லில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் ஹெரிடேஜ் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் நேதாஜி சிலை பகுதியில் தொடங்கிய பேரணி, உழவர் சந்தை வழியாக சென்று தெப்பக்குளம் பகுதியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ராஜேஷ்குமார், பள்ளித் தலைவர் கே.பி. சரவணன், […]

September 10, 2026 Editor
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நாமக்கல்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக குடோன் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி. பாண்டித்துரை தலைமை தாங்கினார். பி. தங்கவேல், டி. தினேஷ், சி. பழனிவேல், ஏ. தங்கராசு, பி. குமார், ஆர். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூலி உயர்வு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உரிய […]

September 9, 2026 Editor
பரமத்தி அருகே கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். நாமக்கல்

பரமத்தி அருகே கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்திற்குட்பட்ட கோலாரம் கிராமம் தாகாக்களரையில் தனியார் நிறுவனம் சார்பில் ‘கேஸ் பாட்லிங் பிளாண்ட் ’ அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோலாரம், செருக்கலை, லத்துவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். […]

September 7, 2026 Editor
செப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – அரசு ஊழியர் சங்கம். நாமக்கல்

செப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – அரசு ஊழியர் சங்கம்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எந்தவித சாதகமான அறிவிப்பும் வெளியாகவில்லை என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பிரதிநிதிகள் பேரவை கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று, அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]

September 4, 2026 Editor
விநாயகர் சதுர்த்தி: சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். நாமக்கல்

விநாயகர் சதுர்த்தி: சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்டகால பாரம்பரியம் உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். செய்ய வேண்டியவை சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு […]

September 4, 2026 Editor
அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை கண்காணிக்க நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு. நாமக்கல்

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை கண்காணிக்க நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் பொருட்கள் கள்ளச்சந்தையில் பதுக்கப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் விலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள், நாமக்கல் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவினர் நாள்தோறும் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளுக்கு நேரில் […]

September 4, 2026 Editor
நாமக்கல்லில் சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த சர்வதேச மாநாடு நிறைவு. நாமக்கல்

நாமக்கல்லில் சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த சர்வதேச மாநாடு நிறைவு.

நாமக்கல்லில் கே.கே.பி. குழும நிறுவனங்கள் மற்றும் ரீடிஃபைன் குழும நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற ‘சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன நிர்வாகம் – 2026’ என்ற சர்வதேச மாநாடு சிறப்பாக நிறைவடைந்தது. நாமக்கல் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, நிறுவன நிர்வாகம் தொடர்பான சர்வதேச விதிமுறைகள், சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் கே.கே.பி. குழுமத் தலைவர் […]

September 4, 2026 Editor
திருமணிமுத்தாறு வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு. நாமக்கல்

திருமணிமுத்தாறு வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, நாமக்கல் மாவட்டத்தின் வழியாக சுமார் 62 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, நன்செய் இடையார் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் திருமணிமுத்தாற்றைச் சார்ந்த நீர்வழிப்பாதைகளில் ஒன்றான மதியம்பட்டி ஏரியில் இருந்து மல்லசமுத்திரம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தூர்வாரும் பணிகள் என்ற பெயரில் வாய்க்காலை அதிக ஆழம் மற்றும் அகலத்துடன் அமைத்து, இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புச் […]

September 4, 2026 Editor