32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல் மாவட்டத்தில் 310 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்: கலெக்டர் மதுபாலன் பங்கேற்பு.

Editor Published: August 15, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மாரப்பநாயக்கன்பட்டி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மதுபாலன் கலந்து கொண்டு தலைமை வகித்தார்.

கிராமப்புற மக்களிடம் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் கலெக்டர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர் திலீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About The Author

உடனடி செய்திகள்