32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம்

Editor Published: August 7, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை சப்–டிவிஷன் செய்து தரக்கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, காந்தியவாதி ரமேஷ் வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை சப்–டிவிஷன் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

About The Author