32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

பு.தி.க தலைவர் ராஜ் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Editor Published: August 4, 2026 1 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி அரசு விழாவில், புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ், வல்வில் ஓரி மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தை ஆண்ட குறுநில மன்னரும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான வல்வில் ஓரி க்கு ஆண்டு தோறும் அரசு விழா ஆடி 18-ஐ முன்னிட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, கொல்லிமலையில் அமைந்துள்ள வல்வில் ஓரி மன்னரின் திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ் தலைமையிலான நிர்வாகிகள், வல்வில் ஓரி மன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவரது புகழை போற்றும் வகையில் முழக்கங்களையும் எழுப்பினர்.

About The Author