32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மக்கள் குறைதீர் கூட்டம்- 743 மனுக்கள் பெறப்பட்டது;

Editor Published: July 27, 2026 1 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


photo caption – 1

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 743 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27,339 மதிப்பிலான ஸ்டிக், கண்ணாடி, சக்கர நாற்காலி மற்றும் பார்வையற்றோருக்கான டெய்சி (Daisy) பிளேயர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க. சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வ. சந்தியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைசெல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

உடனடி செய்திகள்