32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்.

Editor Published: August 14, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், விவசாயிகளின் பயிர்க்கடனை நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி. பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ண ரெட்டி, பரமத்தி-வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் வெ.சரோஜா, வரகூர் ஏ.அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடனை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

About The Author

உடனடி செய்திகள்