செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் உடனமர் தர்மசம்வர்த்தினி தாயார் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கைலாசநாதர், நந்தி பகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு வெள்ளிக்காப்பு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கைலாசநாதர் உடனமர் தர்மசம்வர்த்தினி தாயார் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் திருத்தேரை கோவிலை சுற்றி இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.