செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ குகையான், ஸ்ரீ மதுரைவீரன் சமேத வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆடிப் பச்சை விழா நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணியளவில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணியளவில் அடசல் பெரும்பூஜையும் நடைபெற்றது.
பின்னர் மதியம் 1 மணியளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கொன்னையார் கிராம பொதுமக்கள் மற்றும் குடிப்பாட்டு மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை பூசாரி சரவணன் செய்திருந்தார்.