32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜின் தாயார் உண்ணாவிரதம் இருக்க முயற்சி – நாமக்கல் நீதிமன்றம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Editor Published: September 30, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரியும், தனது மகன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியும், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த யுவராஜின் தாயார் ரத்னத்தை போலீசார் நீதிமன்ற வளாகம் முன்பு தடுத்து நிறுத்தினர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் 2023-ல் உறுதி செய்துள்ளது.

பல ஆண்டுகளாக சிறையில் உள்ள தனது மகன் உள்ளிட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதி தேவதை முன்பு அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க வந்ததாக ரத்னம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“எனது மகன் உள்ளிட்டோர் 11 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு எதிராக உரிய ஆவணங்களும், சாட்சிகளும் இல்லை. இருப்பினும் மூன்று நீதிபதிகள் தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

விஷ்ணுபிரியா வழக்கில் உயரதிகாரிகளின் துன்புறுத்தல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக நான் கருதுகிறேன். அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு சென்ற நிலையில் உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் கூறினார். தனது மகன் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் உண்மைகளை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தரப்பு நியாயத்தை கேட்டதற்காக யுவராஜ் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அமைதியாக இருந்த மற்ற 10 பேர் மீதும் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்குகளை முறையாக விசாரித்து, உண்மையான குற்றவாளிகள் யார் என்பதையும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் கண்டறிந்து உரிய நீதி வழங்க வேண்டும்.

யாரையும் அழைத்து வராமல், எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாமல், தனி நபராக அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க வந்துள்ளேன்” என்றார்.

 

About The Author