32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

Editor Published: August 7, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் ஒன்றியக் கிளை சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஆசிரியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

  • நாமக்கல் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் மாற்றுப்பணி ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், கூட்டு இணையமர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
  • பதிநகர் மற்றும் மாருதிநகர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் விதிமீறிய இடைநிலை ஆசிரியர் மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும்.
  • பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய காலப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
  • விடுப்பு ஊதியம், வைப்புநிதி பகுதி இறுதித்தொகை, முன்பணத் தொகை, தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட பணப்பலன்களை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

About The Author

உடனடி செய்திகள்