32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்லில் ரூ.23 லட்சம் மதிப்பிலான 4.27 டன் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

Editor Published: August 12, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், ரூ.23 லட்சம் மதிப்பிலான 4,127 கிலோபுகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2023 முதல் 2025-ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில், மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் டி.எஸ்.பி. ராஜேஷ்வரன் மற்றும் போலீசார் முன்னிலையில் நாகராஜபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.

அங்கு மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீயிட்டு அழிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் 134 கிலோ கஞ்சா மற்றும் 3,500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ரூ.57.50 லட்சம் மதிப்பிலான 115 கிலோ கஞ்சாவும், ரூ.23 லட்சம் மதிப்பிலான 4,127 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 16 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக் தெரிவித்தார்.

 

About The Author

உடனடி செய்திகள்