32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல் மாவட்டத்தில் 20-ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

Editor Published: August 17, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கூட்டம், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

அதேபோல், திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கான கூட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் காலை 11 மணிக்கு திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்களின் இருப்பு விவரங்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு பெறலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

About The Author