
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் ஹெரிடேஜ் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் நேதாஜி சிலை பகுதியில் தொடங்கிய பேரணி, உழவர் சந்தை வழியாக சென்று தெப்பக்குளம் பகுதியில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ராஜேஷ்குமார், பள்ளித் தலைவர் கே.பி. சரவணன், ரோட்டரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பதுடன், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.