32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

தரமான இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி

Editor Published: August 8, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை மாணவிகள் 5 மணி நேரத்தில் கைத்தறி நெசவாளரை மையமாகக் கொண்டு ஆயிரம் ஓவியங்கள் வரைந்து நோபில் உலக சாதனை படைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர். விஜய் பாலாஜி, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாணவிகள் வரைந்த ஓவியங்களை வழங்கி பாராட்டினார்.

வரவிருக்கும் பொங்கல் விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த காலத்தைப் போல் அல்லாமல் தரமான புதிய ரக இலவச வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். திருச்செங்கோடு சரகத்தில் சுமார் 4,500 கைத்தறி நெசவாளர்களும், 1,300 பெடல் தறி நெசவாளர்களும் உள்ளதாகவும், சின்னப்பம்பட்டி பருத்தி சேலை, இராசிபுரம் பட்டு சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

About The Author

உடனடி செய்திகள்