செய்தியைக் கேட்க / Listen to News
திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் நள்ளிரவில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குமரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அபிஷேக் (29), தனது நண்பர் பார்த்திபன் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில், அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த பார்த்திபன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.