32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>VM TALKS news</span>

திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம். Breaking News

திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்.

திருச்செங்கோடு மற்றும் வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வளர்மதி வெப்படை போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெப்படை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, புதுசத்திரம் போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான இடமாற்ற உத்தரவு காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

August 8, 2026 Editor
நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்; 2 மாதங்களில் நிறைவு – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாமக்கல்

நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்; 2 மாதங்களில் நிறைவு – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவேட்டிப்பட்டி ஏரியை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: காவேட்டிப்பட்டி ஏரி தூர்வாரும் பணி இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும். ஏரியை தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரம் மேம்படும். மேலும், ஏரி சுற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கும். பறவைகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்படுவதுடன், ஏரியில் […]

August 8, 2026 Editor
நாமக்கல்லில் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை நாமக்கல்

நாமக்கல்லில் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை

நாமக்கல் மாநகராட்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், “என் குப்பை, எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மாநகராட்சி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், செல்வகுமார், ஜான் ராஜா, களப்பணி உதவியாளர் சபரிநாதன், தூய்மை பணி மேற்பார்வையாளர் ஜெயராமன், தூய்மை இந்தியா […]

August 8, 2026 Editor
திருச்செங்கோட்டில் ரேப்பிடோ பைக் ரைடர் வாகனங்கள் பறிமுதல்; ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ. திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ பைக் ரைடர் வாகனங்கள் பறிமுதல்; ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ.

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ (Rapido) செயலி மூலம் இயங்கியதாகக் கூறப்படும் இருசக்கர வாகனங்களை ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு வாகனங்களுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்செங்கோட்டில் கடந்த சில நாட்களாக ரேப்பிடோ செயலி மூலம் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இயங்கி வருவதாகவும், இதனால் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையப்பா அனைத்து ஆட்டோ, […]

August 7, 2026 Editor
மங்களம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 5 மாதங்களில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி திருச்செங்கோடு

மங்களம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 5 மாதங்களில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் ஊராட்சியில் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டாஸ்மாக் கடையால் இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அந்தக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து மல்லசமுத்திரம் போலீசார் மற்றும் டாஸ்மாக் தாசில்தார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், […]

August 7, 2026 Editor
மாவட்ட அளவிலான யோகா போட்டி; 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு நாமக்கல்

மாவட்ட அளவிலான யோகா போட்டி; 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட யோகா சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான யோகா போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் யோகா வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நாமக்கல் – பரமத்தி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். போட்டியில் பங்கேற்றவர்களின் உடல் நெகிழ்வுத்தன்மை, சமநிலை, […]

August 7, 2026 Editor
பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம் நாமக்கல்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி நாமக்கல்லில் தர்ணா; காந்தியவாதி ரமேஷ் போராட்டம்

பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை சப்–டிவிஷன் செய்து தரக்கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, காந்தியவாதி ரமேஷ் வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். குறிப்பாக, பட்டா மாறுதல், இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் நிலத்தை […]

August 7, 2026 Editor
நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நாமக்கல்

நாமக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் ஒன்றியக் கிளை சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஆசிரியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு: நாமக்கல் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் மாற்றுப்பணி ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், கூட்டு இணையமர்வு கூட்டம் நடத்த வேண்டும். பதிநகர் மற்றும் மாருதிநகர் பள்ளிகளுக்கு […]

August 7, 2026 Editor
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம் நாமக்கல்

அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்- மனுக்கள் ஆகஸ்ட் 20-க்குள் அனுப்பலாம்

இந்திய அஞ்சல் துறையின் நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில், 30.06.2026 உடன் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக (வீடியோ கான்பரன்சிங்) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்களது குறைகளை “Regional Level Pension Adalat” என்ற குறிப்புடன் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனுக்கள் கோட்ட அலுவலகத்திற்கு […]

August 7, 2026 Editor
திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம். திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்.

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாணார்பாளையம் இடுகாட்டில் புதிய பயோ மைனிங் எந்திரம் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் நீண்ட காலமாக அணிமூர் உரக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, […]

August 7, 2026 Editor
உடனடி செய்திகள்