32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>நாமக்கல் மாவட்ட செய்திகள்</span>

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம் திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலாளராக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நகர செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திருநாவுக்கரசு, திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் என்கிற முகிலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குபேந்திரன், மணி, சின்னசாமி, கதிரேசன், சாந்தா, பொருளாளர் ராஜமாணிக்கம், மண்டல துணைச் செயலாளர்கள் பெருமாவளவன், தினேஷ் கார்த்தி, முருகானந்தம், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மல்லசமுத்திரம் ஒன்றிய […]

August 9, 2026 Editor
திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம். Breaking News

திருச்செங்கோடு,வெப்படை இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்.

திருச்செங்கோடு மற்றும் வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வளர்மதி வெப்படை போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெப்படை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, புதுசத்திரம் போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான இடமாற்ற உத்தரவு காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

August 8, 2026 Editor
உலக ரத்த தான தினம்: ராசிபுரம் தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் Breaking News

உலக ரத்த தான தினம்: ராசிபுரம் தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பழங்கள், ஜூஸ், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாணவர்களுக்கு உடல்நல பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ரத்தத்தை […]

August 6, 2026 Editor
பு.தி.க தலைவர் ராஜ்  வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Breaking News

பு.தி.க தலைவர் ராஜ் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி அரசு விழாவில், புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ், வல்வில் ஓரி மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்டத்தை ஆண்ட குறுநில மன்னரும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான வல்வில் ஓரி க்கு ஆண்டு தோறும் அரசு விழா ஆடி 18-ஐ முன்னிட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் […]

August 4, 2026 Editor
ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா. Breaking News

ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். 200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கோவிலில், திருவிழாவின்போது ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் பூச்சாட்டுடன் விழா தொடங்கிய நிலையில், பொங்களாயி அம்மன் மற்றும் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், […]

July 27, 2026 Editor
மல்லசமுத்திரத்தில் ஜூலை 29  மின்தடை;  Breaking News

மல்லசமுத்திரத்தில் ஜூலை 29  மின்தடை; 

மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (29.07.2026) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு மின்வாரிய (இயக்கமும் பராமரிப்பும்) செயற்பொறியாளர் கணேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-  காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைபட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிபட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிபட்டி, செண்பகமகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி மற்றும் கட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் […]

July 27, 2026 Editor
திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி; காலாவதியான கூல்டிரிங்க்ஸ் விற்பனை? நடவடிக்கை எடுக்குமா உணவு பாதுகாப்புத்துறை? Breaking News

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி; காலாவதியான கூல்டிரிங்க்ஸ் விற்பனை? நடவடிக்கை எடுக்குமா உணவு பாதுகாப்புத்துறை?

திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உணவு பாதுகாப்புத்துறை உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் தேவைக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த […]

July 27, 2026 Editor
ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன் ஆன்மீகம்

ஆடி வெள்ளி தரிசனம்… சந்திரகலாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு ஸ்ரீ சந்திரகலாதேவி நிலாபிறை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு அலங்காரங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை […]

July 25, 2026 Editor
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு. Breaking News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டார விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்டிஓ லெனின் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, கனிமவளத் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை காது […]

July 25, 2026 Editor
மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி Breaking News

மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்பிலி கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் வசிக்கும் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழைநீர் சூழ்ந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சாலைகள் சேதமடைதல், வீடுகள் இடிந்து விழுதல், பாம்புகள் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

July 25, 2026 Editor
உடனடி செய்திகள்