32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் திருட்டு: 3 பேருக்கு போலீசார் வலை. சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் திருட்டு: 3 பேருக்கு போலீசார் வலை.

சேந்தமங்கலம் அருகே அதிமுக மாவட்ட பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கபாலி (51). அதிமுகவில் நாமக்கல் மாவட்ட பிரதிநிதியாக உள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. […]

August 25, 2026 Editor
சேந்தமங்கலம் ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணி தீவிரம். சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணி தீவிரம்.

சேந்தமங்கலம் பேரூராட்சியில் முக்கிய சந்திப்பாக விளங்கும் ரவுண்டானாவை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே வண்டிப்பேட்டை பகுதியில் மூன்று வழிச்சாலை சந்திப்பு அமைந்துள்ளது. நாமக்கல், ராசிபுரம், புதுச்சந்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த வழித்தடம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்நிலையில், சேந்தமங்கலம் பேரூராட்சி […]

August 20, 2026 Editor
மழையால் மீண்டும் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேந்தமங்கலம்

மழையால் மீண்டும் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலை, சித்தர்கள் தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவது வழக்கம். கொல்லிமலையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி […]

August 17, 2026 Editor