திருச்செங்கோடு
பள்ளி, பஸ் நிலையம் அருகே இயங்கிய டாஸ்மாக் கடை அதிரடி மூடல்: திருச்செங்கோடு மக்கள் நிம்மதி
திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் அதிரடியாகப் பூட்டினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, விதிமீறலாகச் செயல்படும் கடைகளைக் கண்டறிந்து அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டவுன் பகுதியில் […]