Breaking News
சத்திநாயக்கன்பாளையம், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை.
சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில்பாளையம் அம்மன் நகரில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் பஞ்சாயத்து ஆபீசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு அடுத்த சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து, கோவில்பாளையம் பகுதியில் உள்ள அம்மன் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட […]